விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 10 May 2022 4:30 AM IST (Updated: 10 May 2022 4:30 AM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

குன்னம்:
பெரம்பலூர் அருகே உள்ள வெள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி கனகா(வயது 29). சம்பவத்தன்று இவர் செங்குணம் பாலம்பாடி அருகே வயலில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணகி சம்பவ இடத்திற்கு சென்று, அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனகா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கனகாவுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ததால், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story