ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 4:30 AM IST (Updated: 10 May 2022 4:30 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்:
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாதந்திர ஓய்வூதியமாக ரூ.7,850-ஐ அகவிலைப்படியுடன் சேர்த்து வழங்கிட நடவடிக்கை எடுத்து, மூத்த குடிமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். பணிக்கொடை வழங்க வேண்டும். மருத்துவப்படி, மருத்துவ காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். ஈமக்கிரியை செலவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சிவகலை, வேப்பூர் ஒன்றிய தலைவர் சாந்தப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பால்சாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார், பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் முத்துசாமி நன்றி கூறினார்.

Next Story