முகமூடி கும்பல் தப்பிச்சென்ற காரை மீட்க சென்னை விரைந்த போலீசார்


முகமூடி கும்பல் தப்பிச்சென்ற காரை மீட்க சென்னை விரைந்த போலீசார்
x
தினத்தந்தி 10 May 2022 4:30 AM IST (Updated: 10 May 2022 4:30 AM IST)
t-max-icont-min-icon

முகமூடி கும்பல் தப்பிச்சென்ற காரை மீட்க போலீசார் சென்னை விரைந்தனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் பிரதான சாலையை சேர்ந்தவர் பாண்டியன். எலக்ட்ரீசியனான இவரது வீட்டில் நேற்று முன்தினம் அதிகாலை 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் உள்தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்து, பாண்டியனை இரும்பு கம்பியால் தாக்கியும், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியும், அவரது மகளிடம் 3¾ பவுன் நகைகளை பறித்ததோடு, கார் சாவியை பறித்துக்கொண்டு, அந்த காரில் தப்பிச்சென்றனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் முகமூடி கும்பல் தப்பிச்சென்ற கார் சென்னை ஆர்.கே.நகரில் அனாதையாக நிற்பதாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் காரை மீட்க சென்னை விரைந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் முகமூடி கும்பலை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Next Story