முதியவரை தாக்கிய 2 வாலிபர்கள் மீது வழக்கு


முதியவரை தாக்கிய 2 வாலிபர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 May 2022 4:32 AM IST (Updated: 10 May 2022 4:32 AM IST)
t-max-icont-min-icon

முதியவரை தாக்கிய 2 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன்(வயது 60). இவர் சம்பவத்தன்று நள்ளிரவில் இயற்கை உபாதை காரணமாக சிலால் கிராமத்தில் உள்ள ஏரி அருகில் சென்றுள்ளார். ஏரிக்கரையில் சிலால் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் கீர்த்திவாசன்(22), அர்த்தனேரி கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகன் மதன்ராஜ்(22) ஆகியோர் மது அருந்திக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது கண்ணையன் அங்கு வந்ததால் ஆத்திரமடைந்த அவர்கள், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசில் கண்ணையன் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story