பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 4:33 AM IST (Updated: 10 May 2022 4:33 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க பொறுப்பாளர் சிவகுருநாதன் வரவேற்றுப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வேல்முருகன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், சத்துணவு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயராஜ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜவேம்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க பொறுப்பாளர் அன்புசெல்வன் நன்றி கூறினார்.

Next Story