வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை 150 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல்
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்தனர். இதில் 150 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
உப்புக்கோட்டை:
வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா இன்று தொடங்கி வருகிற 17-ந்தேதி வரை 8 நாள் நடக்கிறது.
இந்தநிலையில் வீரபாண்டியில் உள்ள பெட்டிக்கடைகள், டீக்கடைகள் மற்றும் கடைகளில் இன்று தேனி உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தீஸ்குமார் மற்றும் குழுவினர் திடீர் சோதனை செய்தனர். அப்போது 3 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், தரமற்ற, காலாவதியான மிக்சர், காரசேவு, அல்வா, டெல்லி அப்பளம் மற்றும் சாயம் அதிகம் பயன்படுத்தப்பட்ட பஜ்ஜி, வடைகள் என சுமார் 150 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பை பயன்படுத்திய மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்ட்டது.
Related Tags :
Next Story