ரெயில் நிலையம் அருகே வெடிப்பொருட்கள் மீட்பு
ரெயில் நிலையம் அருகே வெடிப்பொருட்கள் இருப்பதைக்கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதை மீட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாக்பூர்,
நாக்பூர் ரெயில் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு வெளியே அமைந்துள்ள போக்குவரத்து போலீஸ் சாவடி அருகே, நேற்று கேட்பாரின்றி பை ஒன்று கிடந்தது. இதை போலீஸ் அதிகாரி ஒருவர் திறந்து பார்த்தபோது, அதில் வெடிப்பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கொடுத்த தகவலின்பேரில் விரைந்து வந்த வெடிகுண்டு செயலிழப்பு படையினர், வெடிபொருட்களை அங்கிருந்து அகற்றினர்.
கைப்பற்றப்பட்ட இந்த பையில் 54 ஜெலட்டிகள் குச்சிகள், ஒரு டெட்டனேட்டர் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story