சாத்தான்குளம் பகுதியில் தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை


சாத்தான்குளம் பகுதியில் தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 10 May 2022 5:43 PM IST (Updated: 10 May 2022 5:43 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பகுதியில், வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
தொழிலாளி
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேக்காமண்டபம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த தாவீது மகன் சுதாகர் (வயது 47). கட்டிட தொழிலாளி. இவருக்கு சுனீலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
சுதாகர், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த குறைபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். நண்பர்கள் அவரை மீட்டு திசையன்விளை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர்
இதேபோல் சாத்தான்குளம் அருகேயுள்ள பெருமாள்குளம் சந்தை தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (75). இவரது மனைவி பூமணி. 3 மகன்களும், 2 மகன்களும் உள்ளனர். மகன்கள், மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது.
அருணாசலமும், அவரது மனைவியும் தனியாக வசித்து வந்தனர். அருணாசலத்திற்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருந்தது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 7-ந்தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் செல்லப்பாண்டி அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்த எபநேசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூக்கில் தற்கொலை
சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் செம்மண்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சிவபெருமாள் (75). இவரது மனைவி கடந்த 11 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். இதனால் மகன் மணிகண்டன் பராமரிப்பில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் மகனிடம் செல்போன் வாங்கி தருமாறு கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் ஏற்கனவே உள்ள பழைய செல்போனை பயன்படுத்தி கொள்ளுமாறு கூறினாராம். இதனால் மனமுடைந்த சிவபெருமாள், அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story