கழிவுநீர் பகுப்பாய்வுக்காக சென்னை ஐ.ஐ.டி.யில் புதிய ஆராய்ச்சி மையம்


கழிவுநீர் பகுப்பாய்வுக்காக சென்னை ஐ.ஐ.டி.யில் புதிய ஆராய்ச்சி மையம்
x
தினத்தந்தி 10 May 2022 6:21 PM IST (Updated: 10 May 2022 6:21 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐஐடியில் கழிவு நீரை ஆய்வு செய்து, நோய்ப்பரவலைக் கண்டறிய புதிய மையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.

கழிவுநீர் பகுப்பாய்வுக்காக சென்னை ஐ.ஐ.டி. புதிதாக ஆராய்ச்சி மையத்தை அமைக்க உள்ளது. இந்த மையம் நகரத்தில் உள்ள கழிவுநீரில் இடம்பெறும் உயிரினங்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றை பரிசோதித்து, பொதுமக்களுக்கு தரவுகளை கிடைக்கச்செய்யும். மேலும் இந்த வசதியானது வைரஸ் பரவலை அதன் ஆரம்ப கட்டங்களிலேயே கண்காணிப்பதற்கும், தடுப்பதற்கும் அறிவு சார்ந்ததாக செயல்படும்.

சுத்தமான தண்ணீரை உறுதி செய்வதற்காக, குறிப்பாக தொற்றுநோய்கள் பரவலின்போது கழிவுநீரை பற்றிய விரிவான புரிதல் தேவைப்படுகிறது என்பதால் சுத்தமான தண்ணீருக்கான சர்வதேச மையம் இந்த ஆராய்ச்சி மையத்தை நிறுவுகிறது என்று சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்து.


Next Story