பூக்கடைகள் முன் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
பூக்கடைகள் முன் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
காங்கயம்
காங்கயம் பஸ் நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் பூக்கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான பூக்கடைகள், கடைகள் சென்னிமலை சாலையில் அமைந்துள்ளது. சென்னிமலை சாலை மிகுந்த போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலையாகும். இந்த நிலையில் பூக்கடைகளில் விற்கப்படும் பூ மற்றும் பூ மாலைகள் வாடாமல் இருக்க அடிக்கடி தண்ணீர் தெளித்து வருவதாலும், அப்படி தெளிக்கும் கழிவுநீரை அங்கேயே கொட்டி விடுவதாலும், அந்த கழிவுநீர் அனைத்தும் கடைகளின் முன்பு நெடுகிலும் தேங்கி நிற்கிறது. இந்த கழிவுநீரால் சாலையோரங்களில் நடந்து செல்பவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. கடைகளின் முன்பு போதுமான வடிகால் வசதி இல்லாததால், கழிவுநீர் சாலையோரம் நீளமாக கால்வாய் போல செல்கிறது.
இதனால் கழிவுநீர் சாலையில் நடந்து செல்வோர் மீது பட்டு ஆடைகளை அசுத்தப்படுத்தி விடுகிறது. முக்கியமாக சென்னிமலை சாலையில் இருந்து பஸ்நிலைய நுழைவு வாயிலில் செல்லும் பயணிகள் தேங்கி கிடக்கும் கழிவுநீரை தாண்டி செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக முதியவர்கள் தடுமாறி விழுகின்றனர்.
மேலும் தேங்கி நிற்கும் கழிவு நீர் காரணமாக கொசு உற்பத்தியாகி டெங்கு போன்ற நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் இப்பகுதியில் தேங்கி நிற்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
---
Related Tags :
Next Story