பின்னலாடை தொழில் தடையின்றி நடைபெற நூல் விலை கிலோவுக்கு ரூ40 உயர்த்தப்பட்டத்தை திரும்ப பெற வேண்டும்
பின்னலாடை தொழில் தடையின்றி நடைபெற நூல் விலை கிலோவுக்கு ரூ40 உயர்த்தப்பட்டத்தை திரும்ப பெற வேண்டும்
திருப்பூர்:
பின்னலாடை தொழில் தடையின்றி நடைபெற நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்பட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், நூற்பாலை சங்கத்தினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திரும்ப பெற வேண்டும்
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பின்னலாடைகளின் முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த 2-ந் தேதி அனைத்து ரகத்துக்கும் கிலோவுக்கு ரூ.40 உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இது பின்னலாடை தொழிலை மிகவும் பாதித்துள்ளது. தொடர்ந்து ஆர்டர்களை எடுத்து செய்ய முடியாமல் திணறி வருகிறார்கள். பின்னலாடை தொழில் நன்றாக நடைபெற ஜவுளி மில் சங்கத்தினர், கோவை சைமா, திண்டுக்கல் டாஸ்மா, கோவை ஐ.டி.எப். நூற்பாலை சங்கத்தினர், உடனடியாக நூல் விலையை கிலோவுக்கு ரூ.40 உயர்த்தியதை திரும்ப பெற தங்கள் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
ஜவுளித்தொழில் என்பது சங்கிலித்தொடர்போல் ஏராளமான தொழில்களை உள்ளடக்கி உள்ளது. நூல் விலை உயர்வால் ஆடை தயாரிப்பு நின்று போனால் அதை சார்ந்துள்ள ஜாப்ஒர்க் நிறுவனங்களும் வேலையிழப்பை சந்திக்கும். இதன் மூலமாக பின்னலாடை உற்பத்தி தொழில் வளர்ச்சி தடைபடும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள்.
கடந்த மாத விலையில்...
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலை பொறுத்தவரை 95 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை உள்ளடக்கியது ஆகும். நூற்பாலைகள் இந்த கோரிக்கையை ஏற்று கடந்த மாத விலைக்கே நூலை கொடுத்து தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். இதை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story