கடம்பூரில் பராசக்தி அம்பிகை மாரியம்மன் கோவில் தேரோட்டம்
கடம்பூரில் பராசக்தி அம்பிகை மாரியம்மன் கோவில் தேரோட்டம் விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கயத்தாறு:
கடம்பூரில் பராசக்தி அம்பிகை மாரியம்மன் கோவில் தேரோட்டம் விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவில் திருவிழா
கடம்பூரில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பராசக்தி அம்பிகை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றுமுதல் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
முதல் நாள் அம்மன் எழுந்தருளல், இரண்டாம் நாள் திருவிழாவில் அம்மன் பட்டு சப்பரத்தில் வீதி உலா வருதல், மூன்றாம் நாள் ரிஷப வாகனத்தில் உலா வருதல் நடைபெற்றது. எட்டாம் திருநாள் அன்று வாணவேடிக்கை, இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரோட்டம்
நேற்று 9-ம் திருநாளை முன்னிட்டு இரவு 7 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனுக்கு பூஜை, தீபாராதனை காட்டப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவில் முன்பு தொடங்கி காமராஜர் சாலை, மேல ரதவீதி, வடக்குவீதி, கீழரதவீதி வழியாக தேரோட்டம் நடந்தது. வழிநெடுக பக்தர்கள் தேங்காய், பழம் உடைத்து, அம்மனுக்கு பட்டாடைகள் மற்றும் பூ மாலைகள் சாத்தி வணங்கி சென்றனர்.
இன்று பட்டுசப்பரம்
10-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு பட்டு சப்பரத்தில் அம்மன் மஞ்சள் பட்டாடை அணிந்து வீதிவலம் வந்து ஆசி வழங்குதல் நடைபெறும்.
சென்னை வாழ் கடம்பூர் இந்து நாடார் உறவின் முறை மகிமை பரிபாலனம் சார்பாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் ஜெயராமன், செயலாளர் எஸ்.ஏ.டி.காளிராஜன், தலைவர் வி.ஆர்.எம்.எஸ்.ஜெயராஜ் நாடார் மற்றும் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.
---------
Related Tags :
Next Story