கடமலைக்குண்டு அருகே சூறைக்காற்றில் முறிந்து விழுந்த இலவமரம் போக்குவரத்து பாதிப்பு
கடமலைக்குண்டு அருகே சூறைக்காற்றில் முறிந்து விழுந்த இலவமரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடமலைக்குண்டு:
கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த காற்று வீசி வருகிறது. இன்று மதியம் கடமலைக்குண்டு அருகே டாணாதோட்டம் பகுதியில் திடீரென சூறைக்காற்று வீசியது. அப்போது தனியார் தோட்டத்தில் இருந்த இலவ மரம் வேரோடு சாய்ந்து தேனி பிரதான சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அங்கு சுமார் 2 மணிநேரம போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 1 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்ததும் கடமலைக்குண்டு போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியோடு சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். மரம் முறிந்து விழுந்ததால் தேனி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story