போலி மருத்துவர் மீது வழக்கு


போலி மருத்துவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 May 2022 8:53 PM IST (Updated: 10 May 2022 8:53 PM IST)
t-max-icont-min-icon

கூடங்குளத்தில் போலி மருத்துவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கூடங்குளம்:
கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் ஞானதாசன் (வயது 62). இவர் கூடங்குளம் அணுமின் நிலைய மெயின் கேட் எதிரே மெடிக்கல் நடத்தி வருகிறார். இவர் தனது மெடிக்கலுக்கு வரும் சிலருக்கு, மருத்துவர் செய்ய வேண்டிய சிகிச்சையை செய்து வருவதாக ஊர் நலப்பணி இணை இயக்குனர் ஜான் பிரிட்டோவுக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர் கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றொரு ஜான் பிரிட்டோவுடன் இணைந்து அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்கு மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ேபாலி மருத்துவர் ஞானதாசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Next Story