வயதானவர்களை குறிவைத்து தங்கச்சங்கிலி பறிப்பு- 3 பேர் கைது
மும்பையை சேர்ந்த மூதாட்டியிடம் அண்மையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை, பறித்த 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் பிடித்தனர்.
மும்பை,
மும்பையை சேர்ந்த மூதாட்டி ஜெயஸ்ரீ(வயது 83). இவரிடம் அண்மையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை, 3 பேர் கொண்ட கும்பல் பறித்து சென்றனர். இதனால், அவர் செம்பூர் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் ஆய்வு நடத்தி விசாரித்து வந்தனர். இதில் சங்கிலி பறித்த 3 பேரின் அடையாளம் பதிவாகி இருந்தது தெரியவந்தது.
கோவண்டி மற்றும் தேவ்னார் பகுதியை சேர்ந்த கான் ரஷீத் அப்துல்(24), கான் சபீர் அகமது(29), தப்சீர் அப்பாஸ் சையத் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் திருட்டு சம்பவத்திற்காக ஆட்டோ ஒன்றில், போலி நம்பர் பிளேட்டுடன் வலம் வந்து வயதானவர்களை குறிவைத்து தங்கசங்கிலியை பறித்து வந்ததாக தெரியவந்தது.
Related Tags :
Next Story