ஆக்கிரமிப்பில் உள்ள கோசந்திர ஓடையை மீட்க கோரிக்கை
ஆக்கிரமிப்பில் உள்ள கோசந்திர ஓடையை மீட்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கம்பம்:
கம்பம் அருகேயுள்ள கோசந்திர ஓடை ஊத்துக்காடு மேற்கு பகுதியில் மலைஅடிவாரத்தில் தொடங்கி வள்ளியன்குளம், ஊத்துக்காடு வழியாக அண்ணாபுரத்தில் உள்ள சின்ன வாய்க்காலை சென்றடைகிறது. இந்த ஓடையில் மழைக்காலத்தில் தண்ணீர் செல்லும்போது சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இந்த ஓடையை தற்போது தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இதனால் ஓடை இருந்த சுவடே இல்லாமல் போனது. இதனால் ஓடையில் தண்ணீர் செல்ல முடியாமல் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. எனவே ஆக்கிரமிப்பில் உள்ள கோசந்திர ஓடையை மீட்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story