வட்டமலை கரை ஓடை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


வட்டமலை கரை ஓடை அணையில்  இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 10 May 2022 9:17 PM IST (Updated: 10 May 2022 9:17 PM IST)
t-max-icont-min-icon

வட்டமலை கரை ஓடை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

வெள்ளகோவில்:
வெள்ளகோவில், உத்தமபாளையம் கிராமத்தில் உள்ள வட்டமலை கரை ஓடை அணையிலிருந்து பாசனத்திற்காக 2-வது முறையாக தண்ணீர் திறந்து விடக்கோரி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம், வட்டமலை கரை ஓடை அணை பாசன நீர் பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நடவடிக்கையின் பேரில் நேற்று வட்டமலை கரை ஓடை அணையிலிருந்து இடது மற்றும் வலது பிரதான கால்வாய்களின் படுகையில் பாசன பகுதியில் உள்ள நீர்நிலை பயிர்களை காப்பாற்றும் பொருட்டும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும், நேற்று முதல் தினசரி 40 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது,
இந்நிகழ்ச்சியில் வட்டமலை கரை ஓடை நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் சி.பாலபூபதி மற்றும் இயக்குனர்கள் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மோகன செல்வம், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் கே.ஆர்.முத்துக்குமார், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் லோகநாதன் உள்பட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Next Story