முதுநிலைபட்டதாரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
முதுநிலைபட்டதாரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
உடுமலை,
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, பழைய ஓய்வுதிய திட்டத்தைநடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று குறிப்பிட்டார்.இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரியும், உடுமலை கல்வி மாவட்டத்தில் மேல்நிலைப் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துவதற்கு உடுமலையில் உப மையம் அமைக்க கோரியும் தமிழ் நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலதுணைத்தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் த.முனியப்பன் வரவேற்று பேசினார். தமிழ் நாடு அரசுஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் வாழ்த்தி பேசினார்.முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக உடுமலை கல்வி மாவட்ட தலைவர் ஜோதிமணி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story