ரெயில்வே தரைப்பாலத்தில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றகோரிக்கை
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ள ரெயில்வே தரைப்பாலத்தில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவண்ணாமலை
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ள ரெயில்வே தரைப்பாலத்தில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், தீயணைப்பு நிலையம், வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதானம் போன்ற முக்கிய அலுவலகங்கள் உள்ளன.
இதன் அருகே வேலூர்-விழுப்புரம் இடையேயான ரெயில்பாதை செல்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் தண்டவாளத்தை கடப்பதற்காக ரெயில்வே தரைப்பாலம் கட்டப்பட்டது.
இந்த தரைபாலத்தின் வழியாக தான் வேளாண்மைத்துறை அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி, காவலர் குடியிருப்பு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போன்ற அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்களும், அரசு அலுவலர்களும் சென்று வருகின்றனர்.
கடந்த 4-ந் தேதி மாலையில் திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த தரைப்பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கியது. ஆனால் அந்த மழை நீர் நேற்று வரை அப்புறப்படுத்தபடாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார்சைக்கிள் போன்றவற்றில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழும் ஏற்படுகிறது. வேறு மாற்று வழியில் செல்ல வேண்டும் என்றால் சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றி தான் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
மேலும் தரைப்பாலத்தில் தேங்கி இருக்கும் தண்ணீரில் வெயிலுக்கு இதமாக பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதில் தஞ்சம் அடைகின்றன. ரெயில்வே தரைப்பாலம் கட்டும்போதே மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற்றுவதற்கு தேவையான கட்டமைப்புடன் தான் கட்டப்படும். ஆனால் ஒரு நாள் பெய்த இந்த சாதாரண மழைக்கே இவ்வாறு நாள் கணக்கில் தண்ணீர் தேங்கி இருப்பதாகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தரை பாலத்திற்கே இந்த நிலையா என்று பொதுமக்களும், அரசு ஊழியர்களும் வேதனையாக தெரிவிக்கின்றனர். எனவே ரெயில்வே தரைப்பாலத்தில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதோடு தண்ணீர் தேங்காமல் தடுக்க நிரந்தர நடவடிக்ைக வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story