தொட்டிலில் விளையாடியபோது சேலை கழுத்தை இறுக்கி சிறுமி சாவு


தொட்டிலில் விளையாடியபோது சேலை கழுத்தை இறுக்கி சிறுமி சாவு
x
தினத்தந்தி 10 May 2022 9:36 PM IST (Updated: 10 May 2022 9:36 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தொட்டிலில் விளையாடியபோது சேலை கழுத்தை இறுக்கியதால் சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தொட்டிலில் விளையாடியபோது சேலை கழுத்தை இறுக்கியதால் சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
14 வயது சிறுமி
தூத்துக்குடி தாளமுத்துநகர் வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு அனுசியா (வயது 14), 2 வயதில் பெண் குழந்தை உள்பட 6 குழந்தைகள் உள்ளனர்.
காளீஸ்வரியின் 2 வயது பெண் குழந்தைக்காக வீட்டில் சேலையால் தொட்டில் கட்டப்பட்டு இருந்தது. 
இந்த நிலையில் நேற்று மதியம் அனுசியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். அவள் தனது தங்கைக்காக கட்டப்பட்டு இருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டு இருந்தாள்.
கழுத்து இறுகி சாவு
அப்போது, எதிர்பாராதவிதமாக தொட்டில் சேலை அனுசியா கழுத்தில் சிக்கி இறுக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த அனுசியா மயங்கி விழுந்தாள்.
அந்த சமயத்தில் வீட்டிற்கு வந்த உறவினர்கள், அனுசியா மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவளை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிறுமியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
பரிதாபம்
இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
தூத்துக்குடியில் தொட்டிலில் விளையாடியபோது சேலை, சிறுமி கழுத்து இறுகி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story