குத்தாலம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு


குத்தாலம் ஒன்றியத்தில்  வளர்ச்சி பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு
x
தினத்தந்தி 11 May 2022 12:30 AM IST (Updated: 10 May 2022 9:37 PM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தாா்.

குத்தாலம்:-

குத்தாலம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தாா். 

வளர்ச்சி பணிகள்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேரழுந்தூர், பழைய கூடலூர், கருப்பூர், காஞ்சிவாய் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளையும்
பழைய கூடலூர் கிராம ஊராட்சியில் வெள்ள நிவாரண தடுப்பு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியையும் கலெக்்டா் லலிதா ஆய்வு செய்தார். 

கலெக்டர் ஆய்வு

மேலும்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் ஊராட்சி கட்டிட பணியினையும், ரூ.11 லட்சம் செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணியையும், சிமெண்ட் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தனார். 
அப்போது அவர் பணிகளை விரைவாகவும் தரமாகவும் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது குத்தாலம் ஒன்றியக்குழுத்தலைவர் மகேந்திரன், குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கஜேந்திரன், சுமதி மற்றும் கருப்பூர் ஊராட்சி  தலைவர் செந்தில்குமார், பழைய கூடலூர் ஊராட்சி தலைவர் பாண்டியன் மற்றும் பலர் இருந்தனர்.

Next Story