ஸ்கேன் எடுக்க நீண்ட நேரம் காத்திருந்த கர்ப்பிணிகள்
ஆலங்குளத்தில் ஸ்கேன் எடுப்பதற்காக கர்ப்பிணிகள் காத்து நின்றனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தோறும் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் எடுக்கபடுகிறது. வழக்கம் போல் சுமார் 70-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் காலை 8 மணி முதல் ஸ்கேன் எடுப்பதற்காக காத்திருக்க தொடங்கினர். சுமார் 4½ மணி நேரமாக ஸ்கேன் எடுப்பதற்காக காத்திருந்த பெண்களிடம் மதியம் 12.30 மணிக்கு மேல் பணியில் இருந்த ஊழியர்கள் ஸ்கேன் எந்திரம் பழுது என்றும், மின்தடை காரணமாக ஸ்கேன் எடுக்க இயலாது என்றும் வெவ்வேறு காரணங்களைக் கூறி அடுத்த வாரம் வருமாறு கூறினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து தென்காசி மாவட்ட தலைமை மருத்துவ அலுவலருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சில நிமிடங்களில் சொந்த வேலையாக வெளியே சென்றிருந்த ஸ்கேன் ஊழியர், எந்த பிரச்சினையும் இல்லாதது போல் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் எடுக்க தொடங்கினார். கர்ப்பிணி பெண்களை தனது சொந்த வேலைக்காக அலைக்கழித்தவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story