மின்கம்பி அறுந்து விழுந்து கல்லூரி மாணவர் சாவு


மின்கம்பி அறுந்து விழுந்து கல்லூரி மாணவர் சாவு
x
தினத்தந்தி 11 May 2022 12:15 AM IST (Updated: 10 May 2022 9:52 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

சீர்காழி:-

சீர்காழி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். 

மின்கம்பி அறுந்து விழுந்தது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தில்லைவிடங்கன் கிராமம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்த செல்வகுமார் மகன் அபிமன்யு(வயது21). இவர், சீர்காழியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.
நேற்று இவர் திட்டை பகுதியில் உள்ள ஒரு வயல்வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்கம்பி அறுந்து அபிமன்யு மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து அபிமன்யு சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த அபிமன்யுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இதனிடையே சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மின்சார துறை உதவி செயற்பொறியாளர் விசுவநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்ரவேலு, பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதுடன், பலியான அபிமன்யுவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். 
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியானது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story