பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
வாசுதேவநல்லூரில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூரில் உள்ள கலைஞர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை சீதாலட்சுமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வாசுதேவநல்லூர் நகரப்பஞ்சாயத்து தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட 20 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு தலைவராக வனிதா, துணைத் தலைவராக சசிகலா ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக, வாசுதேவநல்லூர் வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் இசக்கி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அஞ்சலக கணக்கு புத்தகங்கள் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story