மாவட்ட செய்திகள்

சீர்காழி, திருக்கடையூரில்அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம் + "||" + special camp

சீர்காழி, திருக்கடையூரில்அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம்

சீர்காழி, திருக்கடையூரில்அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம்
சீர்காழி, திருக்கடையூரில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம் நடந்தது.
சீர்காழி:-

சீர்காழி, திருக்கடையூரில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம் நடந்தது. 

சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்தில் உள்ள அகனி, காரைமேடு, எடக்குடி வடபாதி, கீழசட்டநாதபுரம் ஆகிய கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம்கள் நடந்தன. 
முகாமிற்கு சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு துறைகளின் நலத்திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கால்நடைத்துறை மூலம் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்குதல், சினை ஊசி போடுதல், தடுப்பூசிகள் செலுத்துதல் உள்ளிட்ட மருத்துவ பணிகள் நடந்தன. 
முகாமில் துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ராமச்சந்திரன், தமிழரசன், விஜய் அமிர்தராஜ், வேதைராஜன், அலெக்சாண்டர், அட்மா அலுவலர்கள் பார்கவி, ராஜசேகர், சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

திருக்கடையூர்

திருக்கடையூரில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் அண்ணா திட்ட ஒருங்கிணைப்பு முகாம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார். முகாமில் பட்டா மாறுதல், விவசாய நிலத்திற்கு குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க விண்ணப்பம் பெறுதல், பயிர்க்கடன் விண்ணப்பம் உள்ளிட்ட மனுக்களை வேளாண்மை உழவர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். 
இதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர் மோகன கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, நோய்த்தொற்று பரிசோதனை, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்தனர்.