இருசக்கர வாகனம் பழுது நீக்குவோருக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்- சங்க கூட்டத்தில் தீர்மானம்
இருசக்கர வாகனம் பழுது நீக்குவோருக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறையில் இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் முன்னேற்ற நல சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பகவதிகுமார் தலைமை தாங்கினார். இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகன டிங்கர் பெயிண்டர், எலக்ட்ரீசியன் ஆகிய தொழில் செய்பவர்களை மோட்டார் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து, அனைவரும் பயன்பெறும் வகையில் இருசக்கர வாகனம் பழுது நீக்குவோருக்கு என்று தனி நலவாரியம் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அறிவழகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இருசக்கர வாகன பழுது நீக்குவோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story