ஜனதாதளம்(எஸ்) கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்தபிறகே என் மூச்சு நிற்கும்-முன்னாள் பிரதமர் தேவேகவுடா
கர்நாடகத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்தபிறகே தன் மூச்சு நிற்கும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா உருக்கமாக பேசியுள்ளார்
சிக்கமகளூரு: கர்நாடகத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்தபிறகே தன் மூச்சு நிற்கும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா உருக்கமாக பேசியுள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவேகவுடா
சிக்கமகளூரு டவுன் வீட்டுவசதி குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜனதா ஜலதாரே நிகழ்ச்சியும், கட்சி கூட்டமும் நேற்று மாலை நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து அவர் பேசியதாவது:-
கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்து ஆட்சியில் இருக்கும்பொழுது எனது மூச்சை விட வேண்டும். இதுவே எனது விருப்பம். எனக்கு 90 வயது ஆகிவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் எனக்கு 90 வயது ஆகவில்லை. ஏனென்றால் தற்போதும் அரசியல் சம்பந்தப்பட்ட அனைத்தையும் நான் கவனித்து வருகிறேன். குடிநீர், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக போராட்டங்கள் நடத்தியுள்ளேன். எனது வாழ்க்கையே ஒரு போராட்டம். நான் இந்து மதத்தை சேர்ந்தவன். ஒரு நாளைக்கு 2 மணி நேரம் பிரார்த்தனை செய்கிறேன்.
கருணாநிதி...
இந்த நிகழ்ச்சியில் நின்று கொண்டே பேசுகிறேன் என்று தெரிவித்தனர். ஆனால் போஜேகவுடா எம்.எல்.சி. என்னை உட்கார்ந்து பேசும்படி கேட்டுகொண்டார். அதனால் தான் உட்கார்ந்து பேசுகிறேன்.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றவர். அரசியல், மக்கள் பணி செய்வதற்கு வயது தடையில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story