பிளஸ்-1 பொதுத்தேர்வை 16,322 பேர் எழுதினர்


பிளஸ்-1 பொதுத்தேர்வை 16,322 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 10 May 2022 10:19 PM IST (Updated: 10 May 2022 10:19 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 16,322 பேர் எழுதினர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 16,322 பேர் எழுதினர்.

பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 17,114 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக 76 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அங்கு காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடந்தது. 

இந்த தேர்வு பணியில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் 76 பேர், துறை அலுவலர்கள் 76 பேர், வழித்தட அலுவலர்கள் 20 பேர், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 900 பேர் என்று சுமார் 1,500 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் சம்பத்து ஆகியோர் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

792 பேர் எழுதவில்லை

மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க சுமார் 150 பேர் கொண்ட பறக்கும்படையினர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் இந்த தேர்வை 16,322 பேர் எழுதினர். 792 பேர் எழுதவில்லை. தேர்வானது வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது.

Next Story