நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 22,036 மாணவ-மாணவிகள் எழுதினர்


நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 22,036 மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 10 May 2022 10:24 PM IST (Updated: 10 May 2022 10:24 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 22 ஆயிரத்து 36 மாணவ-மாணவிகள் எழுதினர்.

நெல்லை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா தாக்கம் குறைந்ததையொட்டி பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டது. இதைத்தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 

நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 22 ஆயிரத்து 36 மாணவ-மாணவிகள் எழுதினர். இதற்காக 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 99 துறை அலுவலர்களும், 1,068 தேர்வறை கண்காணிப்பாளர்களும் பணியில் ஈடுபட்டனர். மாணவர்கள் சொல்வதை எழுதுவதற்கு 84 பேர் நியமிக்கப்பட்டு அவர்கள் தேர்வு எழுதினர்.

8 பறக்கும் படை குழுவினர் தேர்வு மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். இந்த மையங்களில் மாணவர்களுக்கு குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன.

பிளஸ்-1 பொதுத்தேர்வை பாளையங்கோட்டை சிறை கைதிகள் 7 பேர் எழுதினர். இவர்களுக்காக பாளையங்கோட்டை சிறையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதேபோல் 272 தனித்தேர்வர்களும் இந்த தேர்வை எழுதினார்கள்.

Next Story