கோவையில் போலி பில் தயாரித்து ரூ.10 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் மாநகராட்சி பெண் அதிகாரி உள்பட 2 பேர் மீது துறைரீதியான விசாரணை நடத்த மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்
கோவையில் போலி பில் தயாரித்து ரூ.10 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் மாநகராட்சி பெண் அதிகாரி உள்பட 2 பேர் மீது துறைரீதியான விசாரணை நடத்த மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்
கோவை
கோவையில் போலி பில் தயாரித்து ரூ.10 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் மாநகராட்சி பெண் அதிகாரி உள்பட 2 பேர் மீது துறைரீதியான விசாரணை நடத்த மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
மாநகராட்சி அதிகாரிகள்
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டலத்தில் உதவி நகரமைப்பு அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஐசக் ஆர்தர்.
அதுபோன்று ஜவர்ஹலால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் சசிபிரியா.
இவர்கள் 2 பேரும் மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 2-ந் தேதி முதல் 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி வரை பணியாற்றி வந்தனர்.
அப்போது ஐசக் ஆர்தர் இளநிலை பொறியாளராகவும், சசிபிரியா உதவி செயற்பொறியாளராகவும் பணியாற்றினார்கள்.
இந்த காலக்கட்டத்தில் இவர்கள் 2 பேரும் ஒப்பந்ததாரரான பேரூர் அருகே உள்ள காளம்பாளையத்தை சேர்ந்த இளங்கோ என்பவருடன் சேர்ந்து செய்யாத வேலையை செய்ததாக கூறி மாநகராட்சிக்கு கணக்கு காட்டி உள்ளனர்.
ரூ.10 லட்சம் மோசடி
அதாவது மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பாசியகாரலு வீதியில் ரூ.4 லட்சத்து 96 ஆயிரத்து 157 செலவில் நடைபாதையை சீரமைத்ததாகவும், மழைநீர் வடிகாலை சுத்தம் செய்ததாகவும் போலி ரசீது தயாரித்து உள்ளனர்.
அதுபோன்று வெங்கடசாமி சாலையில் ரூ.5 லட்சத்தில் சாக்கடை கால்வாயில் சிறு சிறு பாலம் அமைத்ததாகவும் கணக்கு காட்டி உள்ளனர்.
அதன்படி மொத்தம் ரூ.9 லட்சத்து 96 ஆயிரத்து 157 செலவில் செய்யாத வேலையை செய்ததாக போலி ரசீது தயாரித்து மாநகராட்சிக்கு கணக்கு காட்டி பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
3 பேர் மீது வழக்கு
இது குறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினார்கள்.
அத்துடன் உதவி நகரமைப்பு அதிகாரி ஐசக் ஆர்தர், செயற்பொறியாளர் சசிபிரியா மற்றும் ஒப்பந்ததாரர் இளங்கோ ஆகியோர் மீது கூட்டுசதி, போலி ஆவணங்களை தயாரித்தல், நம்பிக்கை மோசடி உள்பட 6 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
துறைரீதியான விசாரணை
மாநகராட்சி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால், அவர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது
2 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்த கூடுதல் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story