4 குழந்தைகளின் தாய் தற்கொலை
பேட்டையில் 4 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பேட்டை:
பேட்டை ரகுமான்பேட்டை ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் காஜாமைதீன். இவருடைய மனைவி யாஸ்மின் (வயது 33). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். காஜாமைதீன் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பர் வேலை பார்த்து வருகிறார். 3 மகள்களில் கடைசி மகள் சமீரா (4) மட்டும் பெற்றோருடன் உள்ளார். மற்ற குழந்தைகள் அருகில் உள்ள பாட்டி வீட்டில் வளர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் யாஸ்மின் மனமுடைந்த காணப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை குழந்தை சமீரா, நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தது. சத்தம் கேட்டு எழுந்த காஜாமைதீன், மனைவியை தேடினார். அப்போது அவர், சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவல் அறிந்ததும் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர் யாஸ்மின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story