3-வது மின்இழுவை ரெயில் சேவை நிறுத்தம்


3-வது மின்இழுவை ரெயில் சேவை நிறுத்தம்
x
தினத்தந்தி 10 May 2022 10:44 PM IST (Updated: 10 May 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் 3-வது மின்இழுவை ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

பழனி: 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதையை தவிர்த்து 3 மின்இழுவை ரெயிலகள், ரோப்கார் சேவை உள்ளது. இவற்றில் பராமரிப்பு பணி நடைபெறும் போது, அதன் சேவை நிறுத்தப்படும். அதன்படி பழனி முருகன் கோவிலில் 3-வது மின் இழுவை ரெயிலில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக தேதி குறிப்பிடாமல் அதன் சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 3-வது மின் இழுவை ரெயிலில் கம்பிவடம் மாற்றுவதற்காக தற்போது சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 450 மீட்டர் நீளம் கொண்ட புதிய கம்பிவடம் வாங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 3-வது மின் இழுவை ரெயிலில் பழைய கம்பிவடத்தை அகற்றிவிட்டு புதிய கம்பிவடம் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறும். அதன்பிறகு பக்தர்கள் சேவைக்காக 3-வது மின்இழுவை ரெயில் இயக்கப்படும் என்றார்.
 

Next Story