என்ஜினீயரிங் கல்லூரிக்குள் புகுந்து திருட்டு
காரைக்காலில் என்ஜினீயரிங் கல்லூரிக்குள் புகுந்து திருட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
காரைக்காலை அடுத்த மண்டபத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்குள் புகுந்து மெக்கானிக் பிரிவில் இருந்த காப்பர், அலுமினியம், வெல்டிங் பொருட்களை சிலர் திருடிக்கொண்டிருந்தனர்.
இந்த சத்தம் கேட்டு சந்தேகமடைந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை பிடிக்க முயன்ற போது 2 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரித்ததில் சிதம்பரம் நகர் பகுதியை சேர்ந்த ராம்கி (வயது 33) என்பதும் என்ஜினீயரிங் கல்லூரிக்குள் புகுந்து திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story