வேலூரில் 63 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
வேலூரில் தடைசெய்யப்பட்ட 63 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்
வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் உத்தரவின்பேரில் 4 மண்டலங்களிலும் உள்ள கடைகளில் பயன்படுத்தப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். மேலும் அந்த கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வேலூர் 3-வது மண்டல சுகாதார அலுவலர் பாலமுருகன் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர்கள் ஹேமந்த்குமார், சூர்யமூர்த்தி ஆகியோர் சலவன்பேட்டை குட்டைமேடு பகுதியில் உள்ள கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு கடையில் 51 கிலோ பிளாஸ்டிக் கவர்கள், கேரிபேக் உள்ளிட்டவை இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோன்று 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் தோட்டப்பாளையத்தில் உள்ள 25 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 12 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த கடைகளுக்கு ரூ.3,500 அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story