ரெயிலில் கடத்திய 100 கிலோ குட்கா பறிமுதல்
ஓடும் ரெயிலில் கடத்திய 100 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் அதிகாலை சுமார் 3 மணியளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வரும் ரெயில்களில் சோதனை நடத்திக்கொண்டிருந்தனர்.
அப்போது மைசூரிலிருந்து சென்னை செல்லும் காவேரி அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் 5-வது பிளாட்பாரத்திற்கு வந்து நின்றது. உடனே அந்த ரெயிலில் ஏறி போலீசார் சோதனையில் ஈடுபட்டதில் கேட்பாரற்று கிடந்த லக்கேஜ் பேக்குகளில் 100 கிலோ பான் மசாலா, குட்கா ஆகியவை இருந்ததை கைப்பற்றினர். ஓடும் ரெயிலில் பான் மசாலா மற்றும் குட்கா கடத்தியவர்கள் யார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story