ஊத்தங்கரை வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு
ஊத்தங்கரை வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே குன்னத்தூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியில் நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது போலீசார் ரோந்து வருவதை கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளையில் இருந்து தப்பியது தெரிய வந்தது. மேலும் கொள்ளையர்கள் 2 கண்காணிப்பு கேமராக்களை உடைத்து இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கொள்ளையர்கள் விட்டு சென்ற வெல்டிங் மெஷின், இரும்பு கம்பிகள், கடப்பாரை ஆகியவற்றை போலீசார் மீட்டனர். இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் 2 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க கல்லாவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story