ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு


ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு  நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 May 2022 11:20 PM IST (Updated: 10 May 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

ஓசூர்:
கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதேபோல், ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும். அணையில் 40.51 அடி நீர் இருப்பு இருந்தது. இந்த நிலையில், நேற்று அணைக்கு வினாடிக்கு 583 கனஅடி நீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 640 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

Next Story