கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 79 மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது 2441 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 79 மையங்களில் நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாள் தேர்வை 2,441 மாணவ-மாணவிகள் எழுதவில்லை.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 79 மையங்களில் நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாள் தேர்வை 2,441 மாணவ-மாணவிகள் எழுதவில்லை.
பிளஸ்-1 பொதுத்தேர்வு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்த நிலையில், பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி கடந்த 5-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வும், 6-ந் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் தொடங்கியது.
இந்த நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 31-ந் தேதி முடிவடைகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, மத்தூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்களை சேர்ந்த 109 அரசுப்பள்ளி, 1 அரசு உதவி பெறும் பள்ளி, 82 தனியார் பள்ளிகள் என மொத்தம் 192 பள்ளிகளை சேர்ந்த 12 ஆயிரத்து 373 மாணவர்கள், 12 ஆயிரத்து 63 மாணவிகள், 181 தனித்தேர்வர்கள் உள்பட 24 ஆயிரத்து 617 மாணவர்களுக்கு நேற்று தேர்வு தொடங்கியது.
அதிகாரிகள் ஆய்வு
இதற்காக மாவட்டம் முழுவதும் ெமாத்தம் 79 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று நடந்த பிளஸ்-1 தேர்வை 2,441 மாணவ-மாணவிகள் எழுதவில்லை. இந்த தேர்வுக்கு 103 முதன்மை கண்காணிப்பாளர்கள், 103 துறை அலுவலர்கள், 29 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இவர்கள் தேர்வு மையங்களை கண்காணித்தனர். கல்வி அதிகாரிகள் தேர்வு மையங்களில் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story