கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் முத்திரை இல்லாத 109 தராசுகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் முத்திரை இல்லாத 109 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் முத்திரை இல்லாத 109 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆய்வாளர்கள் ஆய்வு
கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடாசலபதி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் முத்திரை ஆய்வாளர்கள் கிருஷ்ணகிரி நகர்புறம் மற்றும் தர்மபுரி நகர்புறம், பொம்மிடி சந்தை பகுதிகளில் கடந்த 2 நாட்கள் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி நகர்புற பகுதியில் நடந்த ஆய்வின்போது முத்திரை இல்லாத 12 மின்னணு தராசுகள், 9 மேசை தராசுகள், முகத்தல் அளவை 2, இரும்பு எடைகற்கள் 22 என்று மொத்தம் 45 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தர்மபுரி நகர்புறம், பொம்மிடி சந்தை பகுதிகளில் நடந்த ஆய்வின் போது முத்திரை இல்லாத 21 மின்னணு தராசுகள், 9 மேஜை தராசுகள், முகத்தல் அளவை 14, இரும்பு எடைகற்கள் 20 என மொத்தம் 64 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அபராதம்
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள அனைத்து சந்தைகள், மார்க்கெட்டுகள், பஸ் நிலையங்கள் மற்றும் தெருவோர வியாபாரம் செய்யும் இடங்களில் இதுபோன்ற திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை உரிய காலத்திற்குள் மறு முத்திரையிடவும், முத்திரை சான்று பொதுமக்களுக்கு நன்கு தெரியும்படி வைக்க வேண்டும்.
எனவே, வணிகர்கள் முத்திரையிடப்பட்டதற்கான சான்றினை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்படி வைக்காவிட்டாலும், உரிய காலத்திற்குள் மறுமுத்திரையிடாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story