திருச்செங்கோடு நகராட்சியில் ஏரிகளை தூர்வாரும் பணி


திருச்செங்கோடு நகராட்சியில் ஏரிகளை தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 10 May 2022 5:51 PM GMT (Updated: 2022-05-10T23:21:38+05:30)

திருச்செங்கோடு நகராட்சியில் ஏரிகளை தூர்வாரும் பணி நடந்தது.

எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளை எதிர்வரும் மழை காலத்திற்குள் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தவும், விளக்குகளுடன் கூடிய நடைமேடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சூரியம்பாளையம் ஏரிக்கு ரூ.2 கோடியே 35 லட்சமும், கவுண்டம்பாளையம் ஏரிக்கு ரூ.2 கோடியே 57 லட்சமும், மலையடிக்குட்டை ஏரிக்கு ரூ.80 லட்சமும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தூர்வாரும் பணிகளை நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனிடையே சூரியம்பாளையம் முனியப்பன் கோவில் பகுதியில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தரக்கோரி கோரிக்கை விடுத்தனர். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் கணேசன், பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் கண்ணன் மற்றும் கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story