திருச்செங்கோட்டில் மகளிர் கைப்பந்து போட்டி: டாக்டர் சிவந்தி கிளப் அணி சாம்பியன்


திருச்செங்கோட்டில் மகளிர் கைப்பந்து போட்டி: டாக்டர் சிவந்தி கிளப் அணி சாம்பியன்
x
தினத்தந்தி 10 May 2022 5:52 PM GMT (Updated: 2022-05-10T23:22:02+05:30)

திருச்செங்கோட்டில் நடந்த மகளிர் கைப்பந்து போட்டியில் டாக்டர் சிவந்தி கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு கைப்பந்து கழகம் சார்பில் மகளிர் கைப்பந்து போட்டி நடந்தது. திருச்செங்கோட்டில் சேலம் சாலையில் உள்ள திடலில் கடந்த 3 நாட்களாக லீக் முறையில் போட்டிகள் நடந்து வந்தன. திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக பொது செயலாளர் மார்டின் சுதாகர் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இறுதிப்போட்டியில் சென்னை டாக்டர் சிவந்தி கிளப் அணியும், கோபி பி.கே.ஆர். அணியும் மோதின. இதில் டாக்டர் சிவந்தி கிளப் அணி 2-1 என்ற செட் கணக்கில் பி.கே.ஆர். அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து பரிசளிப்பு விழா நடந்தது. இதில் முதலிடம் பிடித்த டாக்டர் சிவந்தி கிளப் அணி, 2-ம் இடம் பிடித்த பி.கே.ஆர். அணி, 3-ம் இடம் பிடித்த கர்நாடக அணி மற்றும் 4-ம் இடம் பிடித்த சென்னை அணிகளுக்கு சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன. தொழில் அதிபர் குணசேகரன், த.மா.கா. மாவட்ட செயலாளர் செல்வகுமார், கைப்பந்தாட்ட குழு தலைவர் யோகானந்தம் ஆகியோர் கோப்பைகளை  வழங்கினர். இதில் எஸ்.கே.வி. பள்ளிகளின் தலைவர் ரவி, ஒன்றிய தி.மு.க. செயலாளர் வட்டூர் தங்கவேல், ஒன்றிய தலைவர் சுஜாதா, தொழில் அதிபர் ஜான்சன்ஸ் நடராஜன், செங்குந்தர் கல்லூரி டீன் பாலதண்டபாணி, அமைப்பு செயலாளர் அங்கப்பன், கைப்பந்தாட்ட குழு பொருளாளர் பாலசுப்ரமணியம், செயலாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story