மாவட்ட செய்திகள்

அரூர் அருகே பள்ளி மாணவி கடத்தல்அனைத்து மகளிர் போலீசார் விசாரணை + "||" + Student abduction

அரூர் அருகே பள்ளி மாணவி கடத்தல்அனைத்து மகளிர் போலீசார் விசாரணை

அரூர் அருகே பள்ளி மாணவி கடத்தல்அனைத்து மகளிர் போலீசார் விசாரணை
அரூர் அருகே பள்ளி மாணவி கடத்தல் தொடர்பான புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர்:
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி திடீரென மாயமானார். பெற்றோர் மகளை தேடியபோது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மாணவியை கடத்திய ஆட்டோ டிரைவர் கைது
மாணவியை கடத்திய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டாா்.