அண்ணன்-தம்பிக்கு இடையே நிலத்தகராறு: சமாதானம் செய்த தொழிலாளிக்கு கத்திக்குத்து


அண்ணன்-தம்பிக்கு இடையே நிலத்தகராறு: சமாதானம் செய்த தொழிலாளிக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 10 May 2022 5:52 PM GMT (Updated: 2022-05-10T23:22:41+05:30)

ஊத்தங்கரை அருகே அண்ணன்-தம்பிக்கு இடையே நிலத்தகராறை சமாதானம் செய்த தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது.

ஊத்தங்கரை:
ஊத்தங்கரையை அருகே உள்ள அனுமன்தீர்த்தம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் குமார் (வயது 28). தொழிலாளி. இவரது உறவினர் ஜெயராமன் (37). இவருக்கும், இவரது தம்பிக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் அண்ணன், தம்பிகளுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த யுவராஜ்குமார் அவர்களை சமாதானப்படுத்தினார். அப்போது ஆத்திரம் அடைந்த ஜெயராமன் கத்தியால் யுவராஜ்குமாரை குத்தினார். மேலும் ஜெயராமனின் மனைவி லட்சுமி (31) உள்ளிட்ட 2 பேரையும் அவர் தாக்கினார். அவர்களும் காயம் அடைந்தனர். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story