தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 11:22 PM IST (Updated: 10 May 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி கீழ்பென்னாத்தூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கீழ்பென்னாத்தூர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி கீழ்பென்னாத்தூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கீழ்பென்னாத்தூரில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் அய்யாசாமி, துணை செயலாளர்கள் நடராஜ், குமார், துணைத்தலைவர்கள் பால்தங்கம், பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் திருவண்ணாமலை கல்வி மாவட்ட செயலாளர் கறீம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜன், குலசேகரன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினர்.

முடிவில் வட்டார பொருளாளர் ஜானகி நன்றி கூறினார்.

இதேபோல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தக்கோரி வந்தவாசியில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story