ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 5:52 PM GMT (Updated: 2022-05-10T23:22:51+05:30)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வாசுதேவநல்லூர்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வாசுதேவநல்லூர்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வாசுதேவநல்லூர் வட்டார கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் சந்திரமதி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ஜேம்ஸ் ஆரோக்கியராஜ், வட்டார துணை செயலாளர் அருள் ஜோசப் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் மாரிமுத்து வரவேற்று பேசினார். கோரிக்கைகளை விளக்கி முன்னாள் வட்டார செயலாளர் ஈஸ்வரன், அண்ணாமலை, கற்பகராஜ் ஆகியோர் பேசினர். முடிவில் வட்டார பொருளாளர் இசக்கி ராஜா நன்றி கூறினார்.

சங்கரன்கோவில்- பாவூர்சத்திரம்

சங்கரன்கோவில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகிகள் கோமதி, மீனாட்சிசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மரிய அந்தோணி, வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முருகேசன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் வேல்ராஜன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் மணிமேகலை, முன்னாள் மாவட்ட செயலாளர் பால்ராஜ், கல்வி மாவட்ட தலைவர் மாணிக்கம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், செல்வம், வட்டார தலைவர் கணேசன், நகர பொருளாளர் முனீஸ்வரன், அனைத்து ஓய்வூதிய சங்கத்தைச் சேர்ந்த முத்தானந்த தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார பொருளாளர் ஹெலன் மேரி கிறிஸ்டி பாய் நன்றி கூறினார்.

பாவூர்சத்திரத்தில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். கீழப்பாவூர் ஆசிரியர் சங்கத் தலைவர் சவுந்திரபாண்டியன் முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் அருள்ராஜ் வரவேற்றார். தென்காசி மாவட்ட தலைவர் ரமேஷ் சிறப்புரையாற்றினார். தென்காசி கல்வி மாவட்ட தலைவர் சுதர்சன் விளக்க உரை ஆற்றினார். ஆசிரியை தேன்மொழி நன்றி கூறினார்.


Next Story