தொப்பூர் கணவாயில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி இறந்தார்.
நல்லம்பள்ளி:
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தினகரன் (வயது25), பிரபாகரன் (21). கூலித் தொழிலாளிகள். இவர்கள் வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டாவில் இருந்து ஈரோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கடந்த 3-ந் தேதி வந்தனர். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் வந்த போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் படு காயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தினகரன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். பிரபாகரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு சாலையோரம் நின்று பேசிக்கொண்டு இருந்த 2 பேர் கார் மோதி பலியானார்கள். மேலும் அந்த கார், பாலத்தில் இருந்து பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.