தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் 1,459 டன் உரம் வந்தது


தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் 1,459 டன் உரம் வந்தது
x
தினத்தந்தி 10 May 2022 5:52 PM GMT (Updated: 10 May 2022 5:52 PM GMT)

தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் 1,459 டன் உரம் வந்தது.

தர்மபுரி:
சென்னை மணலியில் இருந்து தர்மபுரிக்கு 1,458.90 டன் யூரியா உரம் சரக்கு ரெயில் மூலம் வந்தது. இந்த உரங்களை ரெயிலில் இருந்து இறக்கி லாரிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா உத்தரவுப்படி நடைபெற்றது.
இந்த பணியை வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன், விற்பனை அலுவலர் மேகநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதன்படி மாவட்ட வாரியாக தர்மபுரிக்கு 372 டன், கிருஷ்ணகிரிக்கு 523 டன், சேலத்திற்கு 563.90 டன் உரங்கள் பிரித்து அனுப்பப்பட்டன. இந்த உரங்களை விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி அரசு நிர்ணயித்துள்ள விலையில் பெற்று பயன் பெறலாம்.

Next Story