அரூர் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை: 20 ஏக்கரில் பயிரிட்டு இருந்த வாழை மரங்கள் சாய்ந்தன விவசாயிகள் கவலை
அரூர் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை காரணமாக 20 ஏக்கரில் பயிரிட்டு இருந்த வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
அரூர்:
அரூர் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை காரணமாக 20 ஏக்கரில் பயிரிட்டு இருந்த வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
சூறைக்காற்றுடன் கனமழை
தர்மபுரி மாவட்டம் அரூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, வேப்பம்பட்டி, கீழானூர், செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதியில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் பயிரிட்டு இருந்த சுமார் 50 ஏக்கரில் பயிரிட்டு இருந்த வாழை மரங்கள், பாக்கு உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
மேலும் அந்த பகுதிகளில் மின்கம்பங்களும் சாய்ந்தன. இதன் காரணமாக அந்த பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கிராமங்கள் இருளில் மூழ்கின. சில இடங்களில் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. மரக்கிளைகள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
நிவாரணம்
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அரூர் பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் வேருடன் சாய்ந்தது. வேப்பம்பட்டி பகுதியில் மட்டும் 20 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தன. எனவே சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story