தளி அருகே 2 நாட்டுத்துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு


தளி அருகே  2 நாட்டுத்துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 10 May 2022 11:33 PM IST (Updated: 10 May 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

தளி அருகே 2 நாட்டுத்துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைக்கப்பட்டன.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் ஒப்படைக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். இதையடுத்து தளி அடுத்த தேவர்பெட்டா கிராமத்தை சேர்ந்த மல்லேஷ் (வயது 40), லகுமா (40) ஆகியோர் தங்களது உரிமம் இல்லாத 2 நாட்டுத்துப்பாக்கிகளை தளி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Next Story