காவிரி கூட்டுக்குடிநீர் பைப்புகளை சீரமைக்க வேண்டும்


காவிரி கூட்டுக்குடிநீர் பைப்புகளை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 May 2022 11:44 PM IST (Updated: 10 May 2022 11:44 PM IST)
t-max-icont-min-icon

காவிரி கூட்டுக்குடிநீர் பைப்புகளை சீரமைக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வாணியம்பாடி

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா பாரி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பூபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாவதி, முருகேசன் (திட்டம்) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்களின் மீது, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் போடப்பட்டுள்ள காவிரி கூட்டுக்குடிநீர் பைப் பழுதடைந்து உள்ளதாகவும், அதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றியக் குழு தலைவர் உறுதியளித்தார். இதேபோல், ஆலங்காயம் ஒன்றியத்தில் பழுதடைந்த அனைத்து பள்ளிகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் சித்ரா, வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, வனத்துறையினர், சமூகநலத்துறையினர் உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ‌

Next Story